இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு

'ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்' T20 கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில்

Published November 22, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

‘ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்’ T20 கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி பங்களாதேஷ் ஏ அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 154 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. 

ஆரம்பத்தில் இலங்கை அணி அதிரடியான தொடக்கத்தைப் பெற்றது. 3.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக இலங்கை அணியின் இன்னிங்ஸ் சரிவைச் சந்தித்தது. ஒரு கட்டத்தில் 13.2 ஓவர்களில் 99 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. 

இந்த இக்கட்டான சூழ்நிலையில், 9வது விக்கெட்டுக்காக இணைந்த மிலன் ரத்நாயக்க மற்றும் ட்ரவீன் மெத்தியூ ஜோடி 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றி நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தனர். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியை விளாசிய மிலன், 4 பந்துகளில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்குப் போட்டியைக் கொண்டு வந்தார். எனினும், நடுவர் வழங்கிய சர்ச்சைக்குரிய எல்.பி.டபிள்யூ தீர்ப்பினால், 32 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்றிருந்த மிலன் ஆட்டமிழக்க நேரிட்டது. அந்தத் தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்திருந்தால், போட்டியின் முடிவு வேறாக அமைந்திருக்கக்கூடும். 

நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பங்களாதேஷ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதற்கமைய, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *