யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Published November 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்ப்பாணம் – குருநகர் கடலில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.
குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணையை பார்க்க நேற்று இரவு சென்ற சிறுவன் காணாமல்போயிருந்த நிலையில் அப்பகுதி மக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
சிறுவன் படகிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.