திரையரங்குகளை நாளை முதல் மீளத் திறப்பதற்கு தீர்மானம்!

0

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் நாளை முதல் மீளத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் சுமார் 105 நாட்களின் பின்னர் திறக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரம் திரையரங்குகளை நடாத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கலாச்சார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.