ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து : 44 பேர் பலி

ஹொங்கொங் தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தவர்களின்

Published November 27, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஹொங்கொங் தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 279 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹொங்கொங்கின் தை போ மாவட்டத்தில் இந்த குடியிருப்புத் தொகுதி அமையப்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பில் மூன்று நிர்மாண நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எரியக்கூடிய பொருட்களை கட்டிடத்திற்குள் அதிகளவில் வைத்திருந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் 800க்கும் அதிகமான தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 18 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக தீப்பரவல் தொடர்வதாக தெரியவந்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *