நுவரெலியாவில் மண்சரிவு : நால்வர் பலி
நுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக
Published November 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
2 வீடுகள் மண்சரிவில் சிக்குண்டுள்ள நிலையில் வீடுகளில் இருந்தவர்களே உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக கண்டி மாவட்டத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த தெரிவித்தார்.
உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட ஆகிய பகுதிகளிலிருந்தே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.