கொழும்பு – கண்டி வீதிக்கு பூட்டு!
கேகாலை, மீபிட்டியவில் உள்ள 88 கி.மீ மற்றும் 89 கி.மீ மைல் தூண்களுக்கு இடையில், மண்சரிவு
Published November 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கேகாலை, மீபிட்டியவில் உள்ள 88 கி.மீ மற்றும் 89 கி.மீ மைல் தூண்களுக்கு இடையில், மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், விழிப்புடன் இருக்கவும் அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) வலியுறுத்தியுள்ளது.
அத்தியாவசிய பயணங்களைத் தவிர, வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மேலும் அறிவுறுத்தப்படுகிறது.