பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களைத் திறக்குமாறு அமைச்சர் கோரிக்கை
திறக்கக்கூடிய நிலையில் உள்ள பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை நாளை (01) முதல் மீண்டும்
Published November 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
திறக்கக்கூடிய நிலையில் உள்ள பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை நாளை (01) முதல் மீண்டும் திறக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனர்த்த நிலைமையின்போது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகளின் மற்றும் நிபுணர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை அவசியம்.
எனவே, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்குமாறு அனைத்துப் பராமரிப்பு நிலையப் பொறுப்பு அதிகாரிகளிடமும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.