இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் – பிரதமர் சந்திப்பு
இலங்கையிலுள்ள நெதர்லாந்தின் தூதுவர் வீப் ஜேக்கப் டி போயர் (Wiebe Jacob De Boer) அவர்கள்,
இலங்கையிலுள்ள நெதர்லாந்தின் தூதுவர் வீப் ஜேக்கப் டி போயர் (Wiebe Jacob De Boer) அவர்கள், நேற்றையதினம் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.
இச்சந்திப்பில், பல தசாப்தங்களாக இராஜதந்திர மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இருதரப்பினரும் தமது உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.
இலங்கை எதிர்கொண்ட இயற்கை அனர்த்தம் போன்ற சவாலான காலங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்த அபாயத்தைக் குறைத்தல், உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான எதிர்காலப் பாதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
வலுவான மீள்கட்டுமானத்தின் தேவை, மேம்படுத்தப்பட்ட நீண்ட காலத் திட்டமிடல் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவு வழங்குவதன் அவசியம் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.
