சீனாவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ட்ரம்ப்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார். வெள்ளை மாளிகளையில் செய்தியாளர்களிடம்

Published August 26, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார்.

வெள்ளை மாளிகளையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் “அவர்களிடம் சில கார்டுகள் உள்ளன. ஆனால் எங்களிடம் மிகச் சிறந்த கார்டுகள் உள்ளன. நான் அவற்றை கொண்டு விளையாட விரும்பவில்லை. நான் அந்த கார்டுகளை வைத்து விளையாடினால், சீனா அழிந்துபோதும். அதனால்தான் நான் இப்போது அதைச் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன் என்று அவர் கூறினார்.

அதேநேரம், “இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருக்கும்” என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *