கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராக கலாநிதி. எம். கோபாலரெத்தினம் இன்று பதவியேற்பு

0

கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளராக கலாநிதி. எம். கோபாலரெத்தினம் SLAS – Special Grade
அவர்கள் இன்று சுபநேரத்தில் கடமையினை பொறுப்பேற்றார்.
இந் நிகழ்வில் பிரதம செயலாளர் திரு.துசித்த பி வணிகசிங்க மற்றும் ஆளுனரின் பிரத்தியேக செயலாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தினை பிறப்பிடமாக கொண்ட இவர் மூத்ததம்பி செல்லம்மா தம்பதியினரின் புதல்வராவார்.

1995 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை நிருவாக சேவை அதிகாரி என்பதுடன், தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை மட்/ பட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். கலைமாணி பட்டத்தினை பேராதனை பல்கலைக் கழகத்திலும் பொதுநிருவாக துறையில் முதுமானிப் பட்டத்தினை இந்தியா காமராஜர் பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.

இவர் தம்பலகாமம், ஏறாவூர் நகர், பட்டிப்பளை, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும்,

குச்சவெளி, நாவிதன்வெளி,
திருக்கோயில், மற்றும்
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும்,
திறைசேரி முகாமைத்துவ திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாகவும் கடமை புரிந்தார் என்பதுடன் இவர் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது..