மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அனுஷா சந்திரசேகரன்

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட உடரதல்லை தோட்டத்தில் கடந்த காலத்தில் நிலவிய

Published December 5, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட உடரதல்லை தோட்டத்தில் கடந்த காலத்தில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலையால் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேற்று அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், மற்றும் அவசியமான இதர பொருட்களையும் அனுஷா சந்திரசேகரன் மக்களிடம் கையளித்தார்.

இதன்போது கட்சியின் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் லலித்குமார், மத்தியகுழு சிரேஷ்ட உறுப்பினர் ரவி, இளைஞர் அணி தலைவர் ரூபன் மற்றும் தோட்டகமிட்டி தலைவர் உட்பட பிரதேச இளைஞர்களும் இணைந்திருந்தனர்.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகத்துடனான பேச்சுவர்த்தையின் மூலம் சுமூகமானதொரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அனுஷா சந்தசேகரன் உறுதியளித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *