இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உச்சபட்ச ஆதரவை வழங்குவோம்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால்

Published December 5, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்கள் எதிர்கொண்ட பெரும் அனர்த்த நிலைமை குறித்து மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸ (Dr Mohamed Muizzu) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திலும் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் மாலைத்தீவு ஜனாதிபதி அறிவித்தார்.

நேற்று (டிசம்பர் 04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய மாலைத்தீவு ஜனாதிபதி, இந்த கடினமான நேரத்தில் மாலைத்தீவு அரசாங்கமும் மக்களும் இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் துணை இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமது சகோதர நாடான இலங்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தப் போவதில்லை என்றும் கலாநிதி மொஹமட் முய்ஸ வலியுறுத்தினார்.

ஒவ்வொரு கடினமான தருணத்திலும் மாலைத்தீவு இலங்கைக்கு வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்த சந்தர்ப்பத்திலும் மாலைத்தீவு அரசாங்கமும் மக்களும் இலங்கைக்கு வழங்கும் உள்ளார்ந்த ஆதரவு ஒரு பெரும் பலம் என்றும் தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *