பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஆக அதிகரிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக
Published December 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அனர்த்தங்களினால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 பேர் 956 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இந்த பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,179,138 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.