பதுளையில் தொடரும் மண்சரிவு அபாயம்!
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தொடர்ந்து அங்கு மழையுடனான வானிலை நிலவுவதால் தேசிய கட்டிய ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
களுக்கேலே மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சொர்ணாதோட்ட பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேரும், ஊவா பரணகம பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரும், ரிதீமாலியத்த பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேரும், மீகஹாகிவுல பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேரும் மண்சரிவு அபாயம் காரணமாக அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.