முட்டை விலை அதிகரிக்கப்படாது
பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிக்குமென வெளியாகும் கருத்துக்களில் எவ்வித
Published December 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிக்குமென வெளியாகும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லையென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து முட்டையை இறக்குமதி செய்யும் நோக்கில் சிலர் இவ்வாறான போலி விடயங்களை பரப்புவதாக அதன் தலைவர் சரத் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டையை 45 ரூபாவிற்கு குறைவான விலையில் வழங்க முடியுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.