கொரோனா வைரஸ் தொற்று: கொழும்பிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்றுக்கு பூட்டு

0

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்று  மூடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்துக்கு கொரோனாவினால் பாதிக்கப்பட ஒருவருடன் தொடர்பினை வைத்திருந்தவர், வருகை தந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நிருவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.