கனடா உயர்ஸ்தானிகருடன் பிரதமர் சந்திப்பு
2025 டிசம்பர் 15ஆம் திகதி, இலங்கைக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் திருமதி இசபெல்
Published December 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 டிசம்பர் 15ஆம் திகதி, இலங்கைக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் திருமதி இசபெல் கேத்தரின் மார்ட்டின் (Isabelle Catherine Martin) அவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்தித்து கலந்துரையாடினார்.
அலரி மாளிகையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும், அத்துடன் விவசாயத் துறை மற்றும் எதிர்கால ஆசிரியர்-மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையிலான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

