கெஹெல்பத்தர பத்மே வழங்கிய தகவலின்படி துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு
கெஹெல்பத்தர பத்மே என்ற சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்,
கெஹெல்பத்தர பத்மே என்ற சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மே என்ற சந்தேகநபர், தற்போது தடுத்து வைக்கும் கட்டளைக்கு அமைய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபருக்குச் சொந்தமான துப்பாக்கிகள் மற்றும் சொத்துக்கள், தற்போது வெளிநாட்டில் மறைந்து வாழும் மற்றுமொரு திட்டமிடப்பட்ட குற்றவாளியின் பொறுப்பில், இந்நாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து, அதிகாரிகளினால் விசேட அதிரடிப் படை – களனி முகாம் உத்தியோகத்தர்களின் உதவியுடன், எந்தேரமுல்லவிலிருந்து கொழும்பு வீதி வரையிலுள்ள குறுக்கு வீதிகளில் அமைந்துள்ள தற்காலிக அறையொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.
அதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த
• வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று
• டி–56 ரக துப்பாக்கிக்கு பொருத்தக்கூடிய 02 மெகசீன்கள்
• டி–56 ரக செயற்பாட்டுத் தோட்டாக்கள் 267
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இச் சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.