கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் கொரோனா தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொற்றுநோய் பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை இலங்கையில் 2,730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில், 07 பேர் நேற்று குணமடைந்ததை அடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,048 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.