34 நீர்நிலைகள் வான் பாய்கின்றன!

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 34 பிரதான குளங்கள் மற்றும்

Published December 20, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருகின்றன.

அநுராதபுரம் மாவட்டத்தில் கலாவெவ, ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை மாவட்டத்தில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகளில் ஒன்று திறக்கப்பட்டது.

இதன் மூலம் விநாடிக்கு 1,500 கன அடி நீர் அம்பன் கங்கைக்கு வெளியேற்றப்படுகிறது.

கண்டி மாவட்டத்தில் பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் கொண்டு வட்டுவான் குளம் வான்பாய்வதனால் அம்பாறை – இங்கினியாகலை வீதி நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *