மட்டு. செட்டிபாளையத்தில் வேன் விபத்து – ஒருவர் காயம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம் பகுதியின் நேற்றிரவு விபத்துச் சம்பவம் ஒன்று
Published December 20, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம் பகுதியின் நேற்றிரவு விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது .
மட்டு. கல்முனை சாலை வழியே மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த அரச மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேன் விபத்தில் சிக்கிய சந்தர்ப்பத்தில் சாரதி மட்டுமே வேனில் பயணித்துள்ளதோடு, விபத்தில் காயமடைந்த அவர் அவசர சேவை நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.


