இணைய வழி பண மோசடி சம்பவங்கள் உயர்வு – பொதுமக்களுக்கு அதிகாரிகளின் எச்சரிக்கை
இணையத்தளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நடைபெறும் பண மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது.
இணையத்தளங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நடைபெறும் பண மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது.
இணைய வழியாக பொருட்களை கொள்வனவு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நம்பகத்தன்மையை முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்குவதாக கூறி தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் பண மோசடிகள் குறித்து கடந்த சில நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பில் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.