ரஷ்ய இராணுவ உயர் அதிகாரி மீது கார் வெடிகுண்டுத் தாக்குதல்
ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வரோவ், ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவர் ஆக செயல்பட்டு வந்தவர்.
இந்தச் சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் இதுவரை இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
சம்பவம், ரஷ்ய தலைநகரின் தெற்குப் பகுதியில் இடம்பெற்றதாகவும், விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.