உக்ரைனின் ஓடெசா மீது ரஷ்யா தொடர் தாக்குதல்கள்
உக்ரைனின் தெற்குப் பிராந்தியமான ஓடெசா மீது ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதுடன், கடல்சார் மற்றும் துறைமுக உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
உக்ரைனின் தெற்குப் பிராந்தியமான ஓடெசா மீது ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதுடன், கடல்சார் மற்றும் துறைமுக உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
இந்த தாக்குதல்கள் திட்டமிட்டவை என உக்ரைனிய துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா தெரிவித்துள்ளதுடன், உக்ரைனின் கடல் வழி அணுகலைத் தடுக்கவே ரஷ்யா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளார்.
நடத்தப்பட்ட தாக்குதல்களால் சுமார் 1,20,000 மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஓடெசா துறைமுகத்தில் சிவில் கப்பல் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.