வால்வு இல்லாத LPG சிலிண்டர் கொள்வனவிற்கு அனுமதி
2025 முதல் 2027 வரையிலான காலப்பகுதிக்காக, வால்வு இல்லாத வெறுமை LPG சிலிண்டர் வகைகள் நான்கினை கொள்வனவு செய்யும் நோக்கில், லிட்ரோ எரிவாயு கம்பனி இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து சர்வதேச போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, மொத்தமாக நான்கு விலைமனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், குறித்த பெறுகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிலோகிராம் 2.3 அளவிலான 120,000 சிலிண்டர்கள், கிலோகிராம் 5.0 அளவிலான 185,000 சிலிண்டர்கள், கிலோகிராம் 12.5 அளவிலான 450,000 சிலிண்டர்கள் மற்றும் கிலோகிராம் 37.5 அளவிலான 7,000 சிலிண்டர்களை விநியோகிக்கும் ஒப்பந்தம், கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s Sahamitr Metal Pressure Containers Public Co. Ltd நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக உள்ள ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.