14 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷியின் புதிய சாதனை

உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘லிஸ்ட் ஏ’ (List A) போட்டியில் சதம் அடித்த உலகின் இளம் வீரராக இந்தியாவின் 14 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி இன்று (24) புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Published December 24, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘லிஸ்ட் ஏ’ (List A) போட்டியில் சதம் அடித்த உலகின் இளம் வீரராக இந்தியாவின் 14 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி இன்று (24) புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக பீகார் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய சூர்யவன்ஷி, இந்த விசேட சதத்தை வெறும் 36 பந்துகளில் பதிவு செய்தார்.

மேலும், 59 பந்துகளில் 150 ஓட்டங்களை கடந்ததன் மூலம், ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 150 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தி கொண்டார்.

அவர் 84 பந்துகளில் 190 ஓட்டங்களை குவித்துள்ளார்.

2025 ஆண்டு வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ள நிலையில், சமீபத்தில் இந்திய பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *