நானுஓயா–பதுளை இடையிலான புகையிரத சேவை அடுத்த 2 மாதங்களில் தொடக்கம்!”

நானுஓயா மற்றும் பதுளை இடையிலான புகையிரத சேவை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

Published December 25, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

நானுஓயா மற்றும் பதுளை இடையிலான புகையிரத சேவை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

புகையிரதம சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் சேதமடைந்த புகையிரத தண்டவாளங்கள் கட்டம் கட்டமாக மீள்பணிகள் நடைபெற்று வருகின்றன என பிரதிநிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக, சேதமடைந்த புகையிரத மார்க்கம் மற்றும் பாலங்களை மீள புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மார்க்கத்துக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பிரதிநிதி அமைச்சர் தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *