யாழ்ப்பாணத்தில் நத்தார் ஆராதனை
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
Published December 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு திருச்சபைகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இம்முறை நத்தார் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டு ஆராதனைகள் மிக எளிமையாக நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மக்கள் எளிமையான முறையில் நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
நடைபெற்ற மரியன்னை தேவாலய நள்ளிரவு வழிபாட்டில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.