கண்டி மாவட்டத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்.
கண்டி மாவட்ட செயலகத்திற்கு வந்த வெடிகுண்டு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அங்கு விசேட பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Published December 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கண்டி மாவட்ட செயலகத்திற்கு வந்த வெடிகுண்டு அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அங்கு விசேட பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, வளாகம் முழுவதும் தீவிரமாகச் சோதனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
மின்னஞ்சல் மூலம், கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அநாமதேய தகவல் ஒன்று கிடைத்ததையடுத்து, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.