பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு திட்டமிட்ட அறுவர் கைது
சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
Published December 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் , விசேட சுற்றிவளைப்பின் போது, 6 சந்தேக நபர்களுடன் 6 பெற்றோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் குறித்த நிறுவனத்தின் முகாமையாளர், வர்த்தகர் ஒருவர், மூன்று முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மற்றொரு நபர் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.