மருந்துகளுக்கான விலை நிர்ணயமுறை பாராளுமண்டத்தில் சமர்ப்பிப்பு.

மருந்துகளுக்கான விலை

Published August 27, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின்படிமருந்துகளுக்கான விலை நிர்ணய முறையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் 2ஆம் எண் மருந்துகள் (மருந்துகளுக்கான விலை நிர்ணய முறை) விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன இதில் ஒருதயாரிப்புக்கு பொருந்தக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கான வழிமுறையும் ஒரு குறிப்பிட்ட மருந்து அல்லது ஒரு குறிப்பிட்ட மருந்துகளின் குழுவிற்கு பொருந்தக்கூடிய அதிகபட்ச உச்ச வரம்பு நிலையை நிர்ணயிப்பதற்கான வழிமுறையும் அறிமுகப்படுத்தவுள்ளன மேலும் மேட்க்கூறிய விதிமுறைகள் 2025-07-21 தேதியிட்ட 2446/34 எண் கொண்ட அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தொடர்புடைய விதிமுறைகளை சமர்பிப்பதற்க்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *