அமெரிக்க ஜனாதிபதி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு.
யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பு, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு விடுமுறை விடுதியில் நடைபெற்றுள்ளது.
யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான சந்திப்பு, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு விடுமுறை விடுதியில் நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்சங்களைக் கொண்ட திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் யுக்ரைன் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, யுக்ரைன் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ருஸ்தம் உமெரோவ் மற்றும் யுக்ரைன் இராணுவ தலைமைத் தளபதி என்ட்ரி நாதோவ் கலந்து கொண்டனர்.
அதேபோல், அமெரிக்க தரப்பில் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கொஃப், அவரது மருமகன் ஜேரட் குஷ்னர் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.