அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 1,500 விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவின் கடும் பனிப்புயல்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை நியூயோர்க் நகரில் சுமார் 4 அடி உயரத்துக்கு பனி பொழிந்தது.
வெள்ளிக்கிழமை இரவு முதல் 1,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து அல்லது தாமதமாகியுள்ளதாகவும் (FlightAware) தகவல் வெளியிட்டது.
நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேயர் எரிக் ஆடம்ஸ், பனி அகற்றும் பணிகள் முழு வேகத்தில் நடைபெறுவதாகவும், நகரம் அதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பனிச்சரிவுகள் யோசமைட்டி தேசிய பூங்கா மற்றும் மவுண்ட் ரோஸ் ஸ்கீ ரிசார்ட் பகுதிகளில் ஏற்பட்டுள்ளன; இதில் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர் மற்றும் ஒரு பனிச்சறுக்கு வீரர் உயிருடன் மீட்கப்பட்டார். இதே சமயம், அமெரிக்கா முழுவதும் குளிர் அலை மற்றும் விமான போக்குவரத்து தாமதங்கள் தொடர்கின்றன.