கொழும்பில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
கொழும்பு - கிராண்ட்பாஸ் பெர்கியுசன் வீதி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்...
Published December 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு – கிராண்ட்பாஸ் பெர்கியுசன் வீதி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 40 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் கொழும்பு 14ஐச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார் . கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.