யாழில் வழிப்பறி குற்றச்சாட்டில் நால்வர் கைது

புதிதாக கொள்வனவு செய்த அதி நவீன மோட்டார் சைக்கிளுக்கு தவணை காசு கட்டுவதற்காக

Published December 30, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் வீதியில் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடினர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் இருவரையும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவருமாக நால்வரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அண்மையில் மாதாந்த தவணை கட்டணம் செலுத்தும் வகையில் புதிதாக கொள்வனவு செய்த அதிநவீன மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்ததாகவும், அதற்கு தவணை கட்டணம் கட்ட பணம் இல்லாததால், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டோம் என பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *