பெரஹெராவில் யானைகள் குழப்பம் : கண்டியில் பதற்றநிலை
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் புதிய அரிசி விழாவை , கொண்டாடும் விதமாக...
Published December 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் புதிய அரிசி விழாவை , கொண்டாடும் விதமாக பல்லேகெலே பகுதியிலிருந்து பயணித்த பெரஹெரா ஊர்வலத்தின் போது இரண்டு யானைகள் குழப்பமடைந்ததால் பூவெலிகட பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு யானை மற்றைய யானையை தாக்க முயன்றதால் இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் சிறிது நேரத்தில், யானை பாகன்களின் உதவியுடன் யானைகள் இரண்டும் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.