‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாய் – வெளியான தகவல்!

‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபாய்

Published January 4, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், அனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர் சேதமடைந்த வீதிகளில் 99 சதவீதமானவற்றை புனரமைத்து முடிக்க தமது அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், வீடுகளை முற்றாக இழந்தவர்கள் ஒரு வருடம் முடிவதற்குள் தமக்கான வீட்டை அமைத்துக்கொள்ள உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் விவசாயிகளும் தமக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈடு இதுவரை உரிய முறையில் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *