சதொச முன்னாள் முகாமையாளர் கைது!
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் சதொச போக்குவரத்து
Published January 4, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் சதொச போக்குவரத்து பிரிவின் முன்னாள் முகாமையாளர் இந்திக ரத்னமலல, காலியில் வைத்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் புதல்வரான ஜோஹான் பெர்ணான்டோ, சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.