விசேட சுற்றிவளைப்பு பலர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள்

Published January 5, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 28,333 பேர் சோதனையிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 263 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 141 பேரும், போதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் 424 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *