இவ்வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) நடைபெறவுள்ளது.

Published January 6, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் மீனவர் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நன்மைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட பிரகடனம் தொடர்பான பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து, முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பான பிரேரணையும் இன்றைய தினம் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இதன்போது பல சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *