சமூக ஊடக மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்!
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் பாரியளவிலான பண
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் பாரியளவிலான பண மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை பொலிஸார் புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்றை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசேட தடுப்பு நடவடிக்கையானது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நேரடி வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் நபர்களைக் கண்டறிவதும், இவ்வாறான சூழ்ச்சி வலைகளில் சிக்காமல் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து சமூக ஊடகங்கள் மூலம் வரும் ஆசை வார்த்தைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் நிதி சார்ந்த கோரிக்கைகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இணையம் மூலம் மேற்கொள்ளப்படும் குற்றங்களை நுணுக்கமாகக் கண்டறியும் தொழில்நுட்ப வசதிகள் இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.