சென்டி பே கடற்கரை குறித்து ஜனாதிபதி அவதானம்

திருகோணமலை, மனையாவெலி பகுதியில் காணப்படும் சென்டி பே கடற்கரையை மக்கள்

Published January 8, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

திருகோணமலை, மனையாவெலி பகுதியில் காணப்படும் சென்டி பே கடற்கரையை மக்கள் தடையின்றி பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் மற்றும் கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் ஆலோசனை செயற்குழுவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்றையதினம் கூட்டம் இடம்பெற்றது.

ஒலுவில் துறைமுகத்தை அண்மித்த இடங்கள் கடலரிப்புக்கு உள்ளாகும் பிரச்சினை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஒலுவில் துறைமுகத்தை பயன்பாட்டிற்கு எடுக்கும் விதம் குறித்து நாரா நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற்று புதிய சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு துறைசார் அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *