ஆரம்பமானது பாராளுமன்ற நடவடிக்கைகள்!
பாராளுமன்ற அமர்வு இன்றைய தினம் (09) சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர்
பாராளுமன்ற அமர்வு இன்றைய தினம் (09) சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமானது.
இன்றைய சபை நடவடிக்கைகளின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு அமைந்துள்ளது,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 3.00 கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி – அங்கீகரிக்கப்படவுள்ளது.
பி.ப. 3.00 – பி.ப. 5.00 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது.
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்.