இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 போட்டி இன்று!
பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு வு-20
Published January 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
இதன்படி, இன்று (09) நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையிலேயே தொடரை அவர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள்.
இன்றைய போட்டியில் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானகவும், பாகிஸ்தான் அணியின் தலைவராக சல்மான் அலி ஆகாவும் செயற்படவுள்ளனர்.