கிரிக்கெட் போட்டியை காண வந்த இளைஞர் குழு விபத்து
இன்று அதிகாலை A9 வீதியின் மிகிந்தலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்
Published January 10, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று அதிகாலை A9 வீதியின் மிகிந்தலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்வையிடுவதற்காக வந்து, மீண்டும் வேன் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர் குழுவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மிகிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.