இன்று நாடு முழுவதும் GIT பரீட்சை ஆரம்பம்
க.பொ.த உயர்தர 12-ஆம் தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை இன்று
Published January 11, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
க.பொ.த உயர்தர 12-ஆம் தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை இன்று நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த GIT பரீட்சையானது 1,665 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், இதற்காக ஒரு இலட்சத்து தொண்ணூற்று எண்ணாயிரத்து முன்னூற்று மூன்று (198,303) மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, நிலவிய அவசர அனர்த்த நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய 10 பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
நாடளாவிய ரீதியில் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான தேர்வுகள் வரும் 20-ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.