இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பலின் தீயை அணைப்பதற்கு பெருமளவு நிதி செலவிடப்படடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் முழுமையாக மதிப்பிட்டு அறிக்கை ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு சட்டமா அதிபர், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த கப்பலின் தீ தொடர்பில் கடற்படை தளபதி இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர், இலங்கை கடற் பாதுகாப்பு அதிகாரியின் தலைவர் உட்பட அதிகாரிகளுடன் சந்திப்பு நேற்று மாலை சட்ட மா அதிபர் திணைக்களத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்திற்கு இதனால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான செலவுகள் தொடர்பில் முழுமையான மதிப்பாய்வு செய்து அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு சட்ட மா அதிபர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அந்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் மாசு தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கடல் பாதுகாப்பு அதிகார சபைக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் ஆராய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் குழுவினர் கொரோனா தடுப்பு ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.