கிளிநொச்சியில் நான்கு மின்சார உத்தியோகத்தர்கள் கைது

நேற்றைய தினம் மதியம் 12:45 அளவில் கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில்...

Published January 12, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் நேற்றைய தினம் மதியம் 12:45 அளவில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது. 

கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு அதிரடிப்படை முகாமின் டி.ஆர்.எல். அதுக்கோரல அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மதியம் 12.45 மணியளவில் கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதி பகுதியில் ஓர் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர். 

இதன் போது விடுதி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த அனுராதபுரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 04 ஊழியர்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கு பயன்டுத்திய பொருட்கள் என்பன விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பின்வரும் குற்றச்சாட்டுகளின் பேரில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலாவது அரசு நிலத்தில் புதையல் தேடும் நோக்கத்திற்காக உரிமம் இல்லாமல் அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் அரசு சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் எனும் குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர்கள் விசாரணைகள் செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்க பட்டுள்ளனர். 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *