வெலிக்கந்தையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொலன்னறுவை, வெலிக்கந்தை பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு
பொலன்னறுவை, வெலிக்கந்தை பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், கூர்மையான ஆயுதத்தால் தாக்க முற்பட்டதாகக் கூறப்படும் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சந்தேகநபர்களை வெலிக்கந்தை பகுதியில் உள்ள பொலிஸ் வீதித் தடையில் நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டனர். எனினும், அவர்கள் அந்த உத்தரவை மீறி, அருகில் உள்ள வீடொன்றை நோக்கி வேகமாகச் சென்றுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் முயற்சித்த போது, அவர்கள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
நிலமையைக் கட்டுப்படுத்தவும், தற்காப்புக்காகவும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.