தீப்பற்றி எரிந்த MT New Diamond கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை அடைத்த சுழியோடிகள்!

0

கடந்த 3ம் திகதி தீவிபத்துக்கு உள்ளான “MT New Diamond” கப்பல் மட்டக்களப்புக்கு கிழக்காக 45 கடல் மைல் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடற்படையின் சுழியோடிகள் “MT New Diamond” கப்பலின் அடிபாகத்தை சுற்றியுள்ள பகுதிகளை அவதானித்தனர்.

இதன்போது கப்பலின் ´Sea water inlet´ என்ற பகுதிக்கு சேதமேற்பட்டுள்ளமை தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இடதுபுறத்தில் நீர் மட்டத்திலிருந்து சுமார் 19.3 மீட்டர் கீழும், வலதுபுறத்தில் நீர் மட்டத்திலிருந்து 16 மீட்டருக்கும் கீழே இருந்த இரண்டு கடல் நீர் நுழைவாயில்களுடன் இணைக்கப்பட்ட உள் குழாய் அமைப்பு சேதமடைந்தது கண்டறியப்பட்டது.

இதனூடாக கடலில் கலக்கும் மசகு எண்ணையை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை, இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களம், இந்திய கடலோர காவற்படை திணைக்களம் மற்றும் ஏனைய தரப்பினரும் இந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இதேவேளை இந்திய கடலோர காவற்படை திணைக்களத்திற்கு சொந்தமான டொனியர் ரக விமானமும் தேவையேற்படின் பயன்படுத்த மத்தளை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.